ஆலடிகுளம் அம்பாசமுத்திரம்
பார்த்தவர்கள் - 3476
நீர் நிலை பற்றி
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் மலை அடிவாரத்தில் 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது அழகிய ஆலடிக்குளம். மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்தின் மூலம் நீரினைப் பெறும் இக்குளம் 8 முதல் 10 மாதங்கள் நீரினை தேக்கி வைத்து விவசாயத்திற்கு மட்டுமன்றி கால்நடை மற்றும் வன உயிரினங்களின் நீர்த் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இயல் தாவரங்களை அதிகம் கொண்டுள்ள இக்குளத்தில் அயல் தாவரமான சீமைக் கருவேலம் மற்றம் நெய்வேலி காட்டாமணக்கு ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது, அயல் தாவரங்களின் பெருக்கம் இயல் தாவரங்களின் வளர்ச்சியை பாதிக்கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் குளக்கரை நன்றாக வலுப்படுத்தப்பட்டு உள்ளது அவற்றில் மரக்கன்றுகளும் நடப்பட்டு வளர்ந்து வந்துள்ளது.