நம்ம ஊர். நம்ம நீர்.

திருநெல்வேலியின் நீர்நிலைகளை மீட்டெடுத்து புத்துயிர் அளிக்க, அரசு மற்றும் தன்னார்வலர்கள் இணையும் கூட்டு முயற்சி இது.
தன்னார்வலராக பதிய

டிஜிட்டல் வாட்டர் அட்லஸ்

முதல் முறையாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆவணப்படுத்தி, கணினி வரைபடமாக்கும் முயற்சி.
வரைபடத்தைக் காண

மறுசீரமைத்தல் & புத்துயிரளித்தல்

தன்னார்வலர்கள், பொதுமக்களுடன் இணையும் விரிவான, தொடர் மற்றும் கூட்டு முயற்சி
விவரங்களை அறிய

தாமிரபரணியின் தடங்கள்

தாமிரபரணியின் சிறப்புக்களை கண்டறியவும், மீட்டெடுக்கவுமான முன்னெடுப்பு இது.
தடங்களை காண

நெல்லை மரங்கள் விவரணையாக்கம்

திருநெல்வேலி மாவட்ட பசுமைக்குழுவின் முன்முயற்சியில் பாரம்பரிய மரங்களை கணக்கெடுத்து, ஆவணப்படுத்தும் திட்டம் இது
தன்னார்வலராக பதிய

பேரிடர் மேலாண்மை

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தங்கள் வசிப்பிடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதன் விவரங்களை இந்த செயலியின் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம். இங்கே தெரியப்படுத்தும் விவரங்கள், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ச்சியாக கண்காணிக்கபட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சமர்பிக்க

நெல்லை நீர்வளம்: திட்டம் பற்றி

என்ன, யார், எப்படி?

"நீர்இன்று அமையாது உலகு" என்ற வள்ளுவனின் கூற்றுக்கிணங்க நீராதாரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை மீளமைக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் உள்ளோம். விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீராதாரங்களை முறைப்படி பராமரித்து பாதுகாக்கும் முயற்சியே “நெல்லை நீர்வளம்".

பொதிகை அல்லது அகத்திய மலை மற்றும் அதன் வற்றாத ஆறுகள் தென் தமிழகத்தின் அரும்பெரும் செல்வங்களாகும். தாமிரபரணி ஓர் ஆறு மட்டுமல்லாது தென் மாவட்டங்களின் சீரிய பண்பாடு, தனித்துவ பல்லுயிரினச்செரிவு மற்றும் மக்கள் நலன் ஆகிவற்றின் சின்னமாகவும் விளங்குகிறது. தாமிரபரணி மற்றும் நூற்றாண்டுகள் பழமையான பாசனக் குளங்கள், சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள பாசனக் கால்வாய்கள் வறட்சியான திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை செழிப்பாக்கி தென் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும் வாழைத் தோப்புகளாகவும் மாற்றியுள்ளன. இந்நீர்நிலைகள் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதோடு பலவகையான நீர்வாழ் பறவைகள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு ஆதரவளிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை 2021 – 2030 ஆகிய பத்தாண்டு காலத்தை சூழலமைப்பு மறுசீரமைப்பிற்கான ஆண்டுகளாக அறிவித்துள்ளது. நெல்லை நீர்வளம் என்ற இத்திட்டத்தின் வாயிலாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் மற்றும் மாணவர்களை ஒருங்கிணைத்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாவட்டத்தின் ஜீவநதியான தாமிரபரணியையும், மாவட்டத்திலுள்ள 1200க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும் மறு சீரமைக்கின்ற பணிகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று திட்டங்களின் வாயிலாக மேற்கொள்ள உள்ளது.

1. நெல்லை டிஜிட்டல் வாட்டர் அட்லஸ்
2. மறுசீரமைத்தல் & புத்துயிரளித்தல்
3. தாமிரபரணியின் தடங்கள்

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த உயரிய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

நெல்லை டிஜிட்டல் வாட்டர் அட்லஸ்

திருநெல்வேலி நீர் நிலைகளின் டிஜிட்டல் நீர் அட்லஸ்

டிஜிட்டல் வாட்டர் அட்லஸ் திட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆவணப்படுத்துவதையும், வரைபடமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நீர்நிலைகள் தொடர்பான தகவல்களின் களஞ்சியம் கிடைக்குப்பெறும் பலனாக, பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தவும், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் முடியும். நீர்வள முகாமைத்துவத்தில் ஈடுபடுவுள்ள பங்குதாரர்களின் வலையமைப்பை உருவாக்குவதன் மூலம், நிர்வாகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது

நிர்வாக அமைப்பு
தேடுதலுக்கு இங்கே தட்டச்சு செய்யவும்

நெல்லையின் நீர் வள சிறப்புகள்

1200
நீர்நிலைகள்
50
தாவரங்கள்
100
விலங்குகள்
60
தடங்கள்

மறுசீரமைத்தல் & புத்துயிரளித்தல்

நெல்லை நீர்வளம்: நடப்பிலிருக்கும் திட்டங்கள்

விரிவான, தொடர் மற்றும் கூட்டு முயற்சியால் மட்டுமே நீர் நிலைகளை புத்துயிருடன் மீட்டெடுக்க முடியும். நீர் நிலைகளுக்கு புணர் வாழ்வளித்து மீட்டெடுப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், அப்பகுதியில் சுற்றுலாவை வளர்க்கவும், உள்ளூர் குடி நீர் தேவைகளை முழுமையாக நிறைவேற்றவும், சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களையும், பொது மக்களையும் ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபடுத்த வேண்டும். நீர் நிலைகளை முறையாக சுத்தம் செய்தல், அதிலுள்ள அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்தல் போன்ற அனைத்தும் அந்தந்த பகுதியிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.

குறிப்பிடத்தகுந்த முயற்சிகள்

கடும் போராட்டத்துக்கு பின்னான வெற்றி

சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட குறிப்பிடத்தகுந்த நீர்நிலைகள் குறித்த விவரங்கள் இதோ

கூந்தன்குளம்
01 .

கூந்தன்குளம்

திருநெல்வேலி மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பது கூந்தன்குளம், இக்கிராம மக்கள் மற்றும் பறவைகளின் நல்லுறவு பல நூற்றாண்டுகளாக தொடர்கிறது. இயற்கையின் மீது இக்கிராம மக்கள் கொண்டுள்ள கரிசனத்தை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும். குளிர் காலத்தில் குளத்திற்குள் இருக்கும் மரங்களில் மட்டுமன்றி குடியிருப்புகளில் உள்ள வேம்பு, புளி, இன்னபிற மரங்களில் ஆயிரக் கணக்கான பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. 1800களில் திருநெல்வேலியில் வசித்த அருள்திரு. சார்லஸ் தியோபிலஸ் எட்வர்டு ரேனியஸ் அவர்கள் கூந்தன்குளம் பறவைகள் குறித்து பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். இக்குளத்தில் 200க்கும் அதிகமான பறவை சிற்றினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, குறிப்பாக அருகிவரும் கூளக்கிடா பறவைகளின் முக்கிய இனப்பெருக்க ஆதாரமாக இக்குளம் இருக்கிறது. 1994ம் ஆண்டு இக்குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது, இது மக்களின் பறவைகள் சரணாலயம் என்றும் அறியப்படுகிறது.

விஜயநாராயணம் குளம்
02 .

விஜயநாராயணம் குளம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் விஜயநாராயமும் ஒன்று, 16ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் சிவலமற பாண்டியன் அவர்களின் காலத்தில் இக்குளம் வெட்டப்பட்டதாக உள்ளுர் மக்கள் சொல்கின்றனர். நாங்குநேரி பகுதியில் வசித்து வந்த சகோதரர்களான விஜயன் மற்றும் நாரயணன் அவர்கள் மன்னன் சிவலமற பாண்டியன் அவர்களிடம் பணத்தைப் பெற்று இக்குளத்தை வெட்டி முடித்ததால் அவர்களின் பெயராலேயே இக்குளம் அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இக்குளம் முழுவதும் நிரம்பி விட்டால் இக்குளத்திலிருந்து 60கி.மீ. தொலைவில் உள்ள திருச்செந்தூர் வரைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று உள்ளுர் மக்கள் பெருமைப்பட சொல்கிறார்கள். கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் இவ்வளவு பெரிய குளம் இருப்பது அங்குள்ள பறவைகளின் உணவுத் தேவைக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இக்குளத்தில் 200க்கும் மேற்பட்ட பறவை சிற்றினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆட்காட்டி போன்ற நிலத்தில் கூடமைக்கும் பறவைகள் இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. நீர் வற்றிய காலங்களில் நூற்றுக் கணக்கான கால்நடைகளுக்கும் இக்குளம் மேய்ச்சல் ஆதாரமாக உள்ளது.

பிரான்சேரிகுளம்
03 .

பிரான்சேரிகுளம்

திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் நோக்கி சாலை வழியாக பயணம் மேற்கொண்ட எவரும் இக்குளத்தை பார்க்காமல் கடந்திருக்க முடியாது. தாமிரபரணி கன்னடியன் கால்வாய் மூலம் நீரினைப் பெறும் இக்குளம் அதிள அளவிலான நீhப்பறவைகளை கவர்ந்திழுக்கிறது. கோரை, அல்லி போன்ற இயல் நீர்த்தாவரங்கள் இக்குளத்தில் அதிகமாக காணப்படும். உள்ளுர் மக்களால் அமலைக் கிழங்கு (Croptocoryne Spiralis ) என்று சொல்லப்படும் மருத்துவ சக்தி வாய்ந்த கிழங்கு வகைகளை நீர் வற்றியக் காலங்களில் மக்கள் தோண்டி எடுத்து விற்பனைச் செய்கின்றனர். குளத்துக் கரையில் அமைந்துள்ள கரையடி மாடசாமி கோவிலுக்கு விடுமுறைத் தினங்களிலும் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவின் போதும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகைப் புரிகின்றனர்.

திருக்குறுங்குடி பெரிய குளம்
04 .

திருக்குறுங்குடி பெரிய குளம்

நாங்குநேரியின் வடக்கே 1500 வருடங்கள் பழமை வாய்ந்த திருக்குறுங்குடி கிராமம் அமைந்துள்ளது. அழகிய நம்பிராயர் கோவில் மற்றும் திருக்குறுங்குடி பெரியக் குளம் இவ்வூரின் சிறப்பு. களக்காட்டிலிருந்து திருக்குறுங்குடிக்குச் செல்லும் போது சாலையில் மலைமேல் நம்பிக் கோவிலின் தகவல் பலகை இருக்கும், குளக்கரையில் இருந்து மலைமேல் நம்பியை தரிசிப்பது பக்தர்களுக்கு மனமகிழ்வைத் தரும். பண்டைய தமிழரின் நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டான குமிழித் தூம்பு இக்குளத்தில் உள்ளது. உள்ளுர் மக்களால் அமலைக் கிழங்கு (Croptocoryne Spiralis ) என்று சொல்லப்படும் மருத்துவ சக்தி வாய்ந்த கிழங்கு வகைகளை நீர் வற்றியக் காலங்களில் மக்கள் தோண்டி எடுத்து விற்பனைச் செய்கின்றனர்.

இராஜவல்லிபுரம்குளம்
05 .

இராஜவல்லிபுரம்குளம்

தொடர்ச்சியாக உள்ள இராஜவல்லிபுரம், கல்குறிச்சி, குப்பக்குறிச்சி, பாலமடை குளங்கள் ஸ்ரீ வல்லப பாண்டியன் (கி.பி.830-862) காலத்தில் வெட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. குளத்திற்கு தெற்கே தாமிரபரணி நதியும் வடக்கே சிற்றாறு நதியும் செல்கின்றன. குளக்கரைகளில் அமைந்துள்ள சாஸ்தா கோவில்களில் ஆல், அத்தி, அரசு, வேம்பு போன்ற மரங்கள் சோலைகளாக காட்சி அளிக்கின்றன. இக்குளங்கள் பூ நாரை உட்பட அதிக எண்ணிக்கையிலான பறவைகளுக்கு உணவளிக்கிறது. பண்டைய தமிழரின் நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டான குமிழித் தூம்பு இக்குளத்தில் உள்ளது.

தாமிரபரணி நதியின் சிறப்பம்சங்கள்

தமிழகத்தின் ஒரே, வற்றாத ஆண்டு முழுவதும் நீர் ஓடும் ஆறு என்னும் சிறப்பை பெற்றது தாமிரபரணி. 600+ அதிகமான மீன் வகைகள், 50+ வகையான தாவரங்கள். 200+ அதிகமான பறவை இனங்கள் என பல சிறப்பம்சங்கள் கொண்டது தாமிரபரணி ஆறு.

தாமிரபரணியின் தடங்கள்

என்ன, யார், எப்படி?

இந்த முன்னெடுப்பு தாமிரபரணி ஆற்றுப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மாணவ தன்னார்வலர்கள் மற்றும் குடிமக்களின் தீவிர பங்களிப்புடன், உறுதியான தன்னார்வ குழுவை உருவாக்க விரும்புகிறது. வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளின் போது அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்குடன் இணைந்து பணியாற்றுவார்கள். உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் 2002 இன் கீழ் திட்டமிடப்பட்டுள்ள, குடிமக்கள் - உயிர் பன்முகத்தன்மை பதிவேட்டை (PBR) உருவாக்கும் நோக்கத்துடன், உள்ளூர் கலாச்சார மற்றும் பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்துவதில் இந்தக் குழு ஒத்துழைக்கும்.

அனைத்தையும் காட்டு

மர இனங்களின் பன்முகத்தன்மை

பொதிகை மலை, தாமிரபரணி ஆறு, மற்றும் எண்ணற்ற குளங்கள்ஆகியன திருநெல்வேலி மாவட்டத்தை அழகுறச் செய்கின்றன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராணி மங்கம்மாள் காலத்தில் நடப்பட்ட சாலையோர மரங்கள், இவ்வழகை மேலும் பொலிவூட்டுகிறது. ஆல், அத்தி, அரசு, இலுப்பை, நாவல், வேம்பு, பனை, வில்வம், புங்கை, பின்னை மற்றும் மருதம் போன்ற மரங்கள் தாமிரபரணி கரைகள், குளங்கள், கோவில் நந்தவனங்கள், நெடுஞ்சாலைகள், கல்வி நிலையங்கள், புறம்போக்கு நிலங்கள் மற்றும் பொது இடங்களில் அதிகமாக காணப்படுகின்றன.

நெல்லை மரங்கள் விவரணையாக்கம்

மரங்களின் எண்ணிக்கை

தமிழ் நாட்டில் பொது இடங்களில் காணப்படும் மரங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக 02 ஜுலை 2021 அன்று தமிழ்நாடு அரசின் வனம், சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை அமைச்சகம் அரசாணை (G.O.Ms. No: 39 dated 2 July 2021) ஒன்றை பிறப்பித்துள்ளது. இவ்வாணையின் படி மாநில அளவில் ஒரு பசுமைக் குழுவும், மாவட்ட அளவில் ஒரு பசுமைக் குழுவும் நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பசுமை குழுக்கள் பொது இடங்களில் உள்ள மரங்களை பாதுகாப்பது, மரங்களை வெட்டுவதை முறைப்படுத்துவது, தேவையான இடங்களில் இயல் மரங்களை நடுவதற்கு ஆவண செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அரசாணைப் படி பல அரசுத் துறைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களை உள்ளடக்கிய 15 உறுப்பினர்கள் கொண்ட திருநெல்வேலி மாவட்ட பசுமைக் குழு நிறுவப்பட்டது, இக்குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மாவட்ட வன அலுவலர் உறுப்பினர் செயலராகவும் செயல்படுவார்கள். இக்குழுவின் கூட்டம் கடந்த 09 ஆகஸ்டு 2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது, கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள மரங்களை பாதுகாப்பது சம்பந்தமாகவும், புதியதாக மரங்கள் நடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள மரங்களை கணக்கெடுக்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையுடன் இணைந்து அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், மணிமுத்தாறு, நேரு யுவ கேந்திரா மற்றும் நெல்லை இயற்கைச் சங்கம், திருநெல்வேலி இணைந்து மேற்கொள்ள உள்ளார்கள். கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி 8 செப்டம்பர் 2021 அன்று மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில் நந்தவனங்களில் முதல் கட்டமாக கணக்கெடுக்கும் பணி நடைபெறும். படிப்படியாக மற்ற பொது இடங்கள் மற்றும் அரசு வளாகங்களில் கணக்கெடுக்கும் பணி விரிவுப்படுத்தப்படும்.

திருநெல்வேலி

தன்னார்வ பதிவு

நெல்லை நீர்வளம் செயல்பாடுகளில் பங்குபெற உங்களின் தொடர்பு விவரங்களை இங்கே பதிவு செய்யவும். எங்கள் குழு விரைவில் உங்களுடன் தொடர்பு கொள்ளும்.

இப்போது பதிவுசெய்க

நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும்

மாற்றத்தின் ஒரு பகுதியாக இருங்கள்

இந்த அற்புதமான திட்டத்தின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்கக்கூடிய சில வழிகள் இங்கே

 • 01 .

  சுத்தம் மற்றும் மறுசீரமைப்பு

 • 02 .

  நீர் & சூழலியல் கண்காணிப்பு

 • 03 .

  கல்வி மற்றும் விழிப்புணர்வு

 • 04 .

  நெல்லை மரங்கள் விவரணையாக்கம்

 • 05 .

  மரம் நடுதல்

 • 06 .

  மரக்கன்று நன்கொடை

பங்களிக்கும் நிறுவனங்கள்

இந்த திட்டத்திற்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கிற / இசைவு தெரிவித்திருக்கிற நிறுவனங்களின் பட்டியல் இது