வேய்ந்தான்குளம் பாளையம்கோட்டை

பார்த்தவர்கள் - 2557

நீர் நிலை பற்றி

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது வேய்ந்தான்குளம். மழை நீரை முழுமையாக நம்பியுள்ள இக்குளம் முன்பு விவசாயத்திற்கு பயன்பட்டு வந்தது, தற்போது விளை நிலங்களில் குடியிருப்புகள் வந்து விட்டதால் இக்குளம் நீரினை சேர்த்து வைத்து நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவுகிறது. 2019ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளுர் மக்கள் இணைந்து இக்குளத்தை சுத்தப்படுத்தினார்கள், அதற்குப் பின்பு பெய்த மழையில் இக்குளம் முழுவதும் நிரம்பியது. தற்போது இக்குளத்திற்கு அதிக எண்ணிக்கையிலான பறவைகள் வருகைப் புரிகின்றன, வெளிநாடுகளிலிருந்து வருகைபுரியும் நீலச்சிறகு வாத்து இக்குளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில்லித்தாரா, நாமக்கோழி, பவளக்கால் உள்ளான் போன்ற பறவைகளை இக்குளத்தில் நூற்றுக் கணக்கில் காணலாம்.

தன்னார்வலராக பதிவுசெய்ய

மேலப்பாளையம் (பாளையம்கோட்டை)

  • வட்டாரம்
  • பிரிவு
  • வடிநிலம்
  • கோட்டம்
  • உபகோட்டம்
  • வட்டம்

இடம் :

  • பாசன பரப்பு : -
  • கரையின் நீளம் : 2800 m
  • மடைகளின் எண்ணிக்கை : -
  • மடையின் தள மட்டம் : - m
  • குளம் : அல்லாத அமைப்பு
  • கலுங்கு : 2
  • நிறைநீர் மட்டம் : 1.8 m
  • மிகைநீர் மட்டம் : 1.35 m
  • கரைமேல் மட்டம் : 2.1 m
  • நீர்பிடிப்பு : 2.85 ச.கிமீ.
  • கொள்ளளவு : 0.029
  • கலுங்கின் நீளம் : 7.2m