விஜயநாராயணம் குளம் திசையன்விளை

பார்த்தவர்கள் - 1606

நீர் நிலை பற்றி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் விஜயநாராயமும் ஒன்று, 16ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் சிவலமற பாண்டியன் அவர்களின் காலத்தில் இக்குளம் வெட்டப்பட்டதாக உள்ளுர் மக்கள் சொல்கின்றனர். நாங்குநேரி பகுதியில் வசித்து வந்த சகோதரர்களான விஜயன் மற்றும் நாரயணன் அவர்கள் மன்னன் சிவலமற பாண்டியன் அவர்களிடம் பணத்தைப் பெற்று இக்குளத்தை வெட்டி முடித்ததால் அவர்களின் பெயராலேயே இக்குளம் அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இக்குளம் முழுவதும் நிரம்பி விட்டால் இக்குளத்திலிருந்து 60கி.மீ. தொலைவில் உள்ள திருச்செந்தூர் வரைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று உள்ளுர் மக்கள் பெருமைப்பட சொல்கிறார்கள். கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் இவ்வளவு பெரிய குளம் இருப்பது அங்குள்ள பறவைகளின் உணவுத் தேவைக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இக்குளத்தில் 200க்கும் மேற்பட்ட பறவை சிற்றினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆட்காட்டி போன்ற நிலத்தில் கூடமைக்கும் பறவைகள் இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. நீர் வற்றிய காலங்களில் நூற்றுக் கணக்கான கால்நடைகளுக்கும் இக்குளம் மேய்ச்சல் ஆதாரமாக உள்ளது.

தன்னார்வலராக பதிவுசெய்ய

விஜயநாராயணம் (திசையன்விளை)

 • வட்டாரம் Nanguneri
 • பிரிவு Nanguneri
 • வடிநிலம் Nambiyar
 • கோட்டம் Chittar Basin Division, Tenkasi
 • உபகோட்டம் Nambiyar Basin Sub Division,Nanguneri
 • வட்டம் Tamirabarani Basin Circle, Tirunelveli

இடம் :

 • பாசன பரப்பு : 821.86
 • கரையின் நீளம் : 5600 m
 • மடைகளின் எண்ணிக்கை : 4
 • மடையின் தள மட்டம் : 48.5 m
 • குளம் : அல்லாத அமைப்பு
 • கலுங்கு : 2
 • நிறைநீர் மட்டம் : 54 m
 • மிகைநீர் மட்டம் : 54.6 m
 • கரைமேல் மட்டம் : 55.6 m
 • நீர்பிடிப்பு : 11.825 ச.கிமீ.
 • கொள்ளளவு : 8.427
 • கலுங்கின் நீளம் : 100.00, 33.00m