திருக்குறுங்குடி பெரிய குளம் நாங்குநேரி
பார்த்தவர்கள் - 1448
நீர் நிலை பற்றி
நாங்குநேரியின் வடக்கே 1500 வருடங்கள் பழமை வாய்ந்த திருக்குறுங்குடி கிராமம் அமைந்துள்ளது. அழகிய நம்பிராயர் கோவில் மற்றும் திருக்குறுங்குடி பெரியக் குளம் இவ்வூரின் சிறப்பு. களக்காட்டிலிருந்து திருக்குறுங்குடிக்குச் செல்லும் போது சாலையில் மலைமேல் நம்பிக் கோவிலின் தகவல் பலகை இருக்கும், குளக்கரையில் இருந்து மலைமேல் நம்பியை தரிசிப்பது பக்தர்களுக்கு மனமகிழ்வைத் தரும். பண்டைய தமிழரின் நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டான குமிழித் தூம்பு இக்குளத்தில் உள்ளது. உள்ளுர் மக்களால் அமலைக் கிழங்கு (Croptocoryne Spiralis ) என்று சொல்லப்படும் மருத்துவ சக்தி வாய்ந்த கிழங்கு வகைகளை நீர் வற்றியக் காலங்களில் மக்கள் தோண்டி எடுத்து விற்பனைச் செய்கின்றனர்.