கூந்தன்குளம் நாங்குநேரி

பார்த்தவர்கள் - 1311

கூந்தன்குளம் நாங்குநேரி

பார்த்தவர்கள் - 1311

நீர் நிலை பற்றி

திருநெல்வேலி மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பது கூந்தன்குளம், இக்கிராம மக்கள் மற்றும் பறவைகளின் நல்லுறவு பல நூற்றாண்டுகளாக தொடர்கிறது. இயற்கையின் மீது இக்கிராம மக்கள் கொண்டுள்ள கரிசனத்தை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும். குளிர் காலத்தில் குளத்திற்குள் இருக்கும் மரங்களில் மட்டுமன்றி குடியிருப்புகளில் உள்ள வேம்பு, புளி, இன்னபிற மரங்களில் ஆயிரக் கணக்கான பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. 1800களில் திருநெல்வேலியில் வசித்த அருள்திரு. சார்லஸ் தியோபிலஸ் எட்வர்டு ரேனியஸ் அவர்கள் கூந்தன்குளம் பறவைகள் குறித்து பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். இக்குளத்தில் 200க்கும் அதிகமான பறவை சிற்றினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, குறிப்பாக அருகிவரும் கூளக்கிடா பறவைகளின் முக்கிய இனப்பெருக்க ஆதாரமாக இக்குளம் இருக்கிறது. 1994ம் ஆண்டு இக்குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது, இது மக்களின் பறவைகள் சரணாலயம் என்றும் அறியப்படுகிறது.

தன்னார்வலராக பதிவுசெய்ய

கூந்தன்குளம் (நாங்குநேரி)

 • வட்டாரம் Nanguneri
 • பிரிவு Manimuthar Canal Section, Moolaikaraipatti.
 • வடிநிலம் Nambiyar
 • கோட்டம் Tamirabarani Basin Division, Tirunelveli
 • உபகோட்டம் Manimuthar Canals Sub Division, Moolaikaraipatti.
 • வட்டம் Tamirabarani Basin Circle, Tirunelveli

இடம் :

 • பாசன பரப்பு : 77.04
 • கரையின் நீளம் : 2220 m
 • மடைகளின் எண்ணிக்கை : 2
 • மடையின் தள மட்டம் : 60.885 m
 • குளம் : அமைப்பு
 • கலுங்கு : 2
 • நிறைநீர் மட்டம் : 63.38 m
 • மிகைநீர் மட்டம் : 63.73 m
 • கரைமேல் மட்டம் : 65.08 m
 • நீர்பிடிப்பு : 5.498 ச.கிமீ.
 • கொள்ளளவு : 0.53717058
 • கலுங்கின் நீளம் : 23.60 & 10.225m